என் எழுத்து, முதன்முறையாக அச்சில்...

Friday, July 31, 2015 Anisha Yunus 3 Comments

முதன் முதலாக என் ஆக்கம் ஒன்று, அச்சேறுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். குழந்தைகள் இதழில் வெளி வருவது இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. தம்பி Rizwanக்கும், ரிஸ்வானை அறிமுகம் செய்த Fakir Bhaiக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இது வரை என் விமர்சனத்தை மட்டுமே பார்த்து வெறுத்துப்போயிருக்கும் மக்களிடமிருந்து முதல்முறையாக விமர்சனங்களை எதிர்பார்த்து நிற்கிறேன். இது ஒரு தொடராக வெளி வரும் என்பதால், ஆசை தீர மாதா மாதம் திட்டித் தீர்க்கலாம் என்னை :) :)
 
இந்த விஷயத்தை என் ஒமரிடம் சொன்னதும் அவன் சொன்னது, ஆஹா, ஏன் தமிழில் எழுதறீங்க... என்னால படிக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்... என்னால படிக்க முடியாதே என. எனக்கும் வருத்தம்தான் ஹபீபீ <3 ..... தமிழை உனக்கு இன்னும் கற்றுக்கொடுக்கவில்லை என... இன் ஷா அல்லாஹ், வழி செய்வோம். 

குறிப்பு-- அச்சில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. மன்னிக்கவும்.

எல்லாப் புகழும் ஏகன் ஒருவனுக்கே...
வலில்லாஹில் ஹம்த். வலகஷ் ஷுக்ர்.

3 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ் )வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துகள்...

  ஆனால்,
  ரொம்ப சின்ன பகுதிதான் இருக்கு...
  குறைந்தபட்சம் 3 பக்கங்களாவது வ(த)ரலாமே?

  ReplyDelete
 3. மிக அருமையான தொடக்கம், கதையை இங்கேயும் பகிர்ந்து இருந்தால் , நல்ல இருந்திருக்கும் .தலைப்பும் அருமை.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...