நறுமணத்தை தவிர மற்றதெல்லாம் பரப்பும் தமிழ்மணத்திற்கு !!
Tuesday, October 18, 2011
Anisha Yunus
5 Comments
Tuesday, October 18, 2011 Anisha Yunus 5 Comments
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
பதிவுலகில் மகிழ்ச்சியுடன் நினைவு கூறுவதற்காக வைக்கப்படும் ஒரு சக பதிவரின் புனைப்பெயரை, பெயரெச்சமாக்கி , பெயர்ச்சொல்லாக்கி உபயோகித்து, துன்பம் தருமளவிற்கு மனதில் வன்மம் கொண்ட நிர்வாகி!!!
நிர்வாகத்தின் பேரைக் கொண்டு கீழ்த்தரமாக நடந்துகொண்டாலும் அதை மட்டுறுத்தாத, பதிவர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத , மதிப்பளிக்காத , மன்னிப்பு கேட்காத நிர்வாகம்!!!
ஒரு வரிக்காக, தமிழிலுள்ள அத்தனை வக்கிர வார்த்தைகளையும் வரிக்கு வரி உபயோகிக்கும் ??? சிந்தனை!!!!
இதற்கெல்லாம் மேலாய் ஒரு மார்க்கத்தின் நம்பிக்கையில் கொண்டுபோய், தனது 'பலான படங்களை பார்த்த பெருமையை'ப் பீற்றிக்கொள்ளும் கேவலம்!!!
இத்தகைய புகழ்களை எல்லாம் தானே சுமக்க விருப்பப்பட்டு, யாருக்கும் பகிர்ந்தளிக்காமல் சுமந்து கொண்டிருக்கும் தமிழ்மணமே... "இந்த பொழப்புக்கு ------------------------!!!!" (நேயர் விருப்பம்!!)
.
சிம்பிள் தக்காளி சட்னி
Tuesday, September 27, 2011
Anisha Yunus
25 Comments
Tuesday, September 27, 2011 Anisha Yunus 25 Comments
2. முதலில் வெங்காயத்தை உரிக்கவும். உரித்த வெங்காயத்துடன், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
3. பச்சை மிளகாயை மூன்று துண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் சின்ன சின்னதாக நறுக்கவும். தக்காளியை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
4. அடுப்பை ஆன் செய்து, தண்ணீரில்லாமல் துடைத்த கடாயை வைத்து தீயை மீடியம் அளவில் வைக்கவும்.
5. எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்கும்போதே கருவேப்பிலையும் சேர்த்துவிடவும். பின்னர் பச்சை மிளகாயை போட்டு பிரட்டி விடவும்..
6. தீயை கம்மியில் வைத்து வெங்காயத்தை போட்டு கிளறி விடவும்.
7. நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல தெரியும்போது அரைத்த தக்காளியை ஊற்றவும். 1/4 கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அலாசி அதையும் ஊற்றவும்.
8. பின்னர் (1/4 மஞ்சள்பொடி தேவைப்பட்டால் சேர்த்தவும்). கடாயை மூடி போட்டு மூடி விடவும். 5 நிமிடம் சரியாக கம்மி தீயிலேயெ கொதிக்க விடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.
9. கம கம தக்காளி சட்டினி ரெடி.
10. தோசை அல்லது இட்லியுடன் சாப்பிடவும். சாப்பிட்ட பின் மீதியை மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஹை.... மாமா எனக்கு?????? |
மீதி ஃபோட்டோ எடுக்க நேரமில்லை. ஹி ஹி ஹி..... செய்துட்டு சொல்லுங்க :)
.
இறைவனை அஞ்ச மாட்டீர்களா????
Monday, September 19, 2011
Anisha Yunus
5 Comments
Monday, September 19, 2011 Anisha Yunus 5 Comments
அவர், அவரின் அக்கா, அம்மா, அப்பா இவர்களே அவரின் குடும்பம். குஜராத் கலவரத்தின் போது, அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத தன் வேலையுண்டு தானுண்டு என ஒரு குமாஸ்தாவாய் வாழ்ந்து வந்த அந்த சகோதரரின் தந்தையை போலீஸ் இழுத்துச் சென்றது. அப்பொழுது இந்த சகோதரரின் வயது 10 கூட இல்லை. அவரின் அக்காவிற்கு 16/17 வயது. முப்பதுகளில் அவர்களின் அம்மா. அம்மாவும், மகனும், மகளும் போலீஸ் ஸ்டேசனின் படியை தினம்தினம் ஏறினார்கள், அப்பாவியான கணவரை விட்டுவிட சொல்லி. ஒரு வாரம் கழித்து போலீஸ் ஒரு நிபந்தனையுடன் அந்த குடும்பத்தின் தலைவனை விட முன் வந்தது. நிபந்தனை என்ன, அந்த இரவில் வரும் 4 அரசியல்வாதிகளுக்கு அம்மாவும், மகளும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் விடுவோம் என்று. பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியில் வாழ்ந்ததும், இஸ்லாமியர்களாக இருந்ததும், ஏழைகளாகவும் உதவிக்கு ஆளில்லாதவர்களாகவும் இருந்ததே அவர்கள் செய்த மகா பாவம். கணவன் முக்கியமா, கற்பு முக்கியமா என்று அதிகம் ஆராய்ந்து பார்க்க தெரியவில்லை அந்த தாய்க்கு.... ஊமையாய் ஒத்துக் கொண்டனர். அந்த இரவில் அரசியல்வாதிகளும் குண்டர்களுமாய் நான்கு பேர் வந்தனர். அந்த இரவோடு அது முடியவில்லை. ஒரு மாதம் முழுவதும் அந்த மகனின் முன் தாயும், தமக்கையும் சீரழிக்கப்பட்டனர்.
அக்கம்பக்கம் சுற்றம் வெறுமனே வேடிக்கை பார்த்தது பின் அவல் மெல்ல தொடங்கியது. ஒரு மாதம் கழித்து அந்த தந்தையை குற்ருயிரும் கொலையுயிருமாய் விடுதலை செய்தது போலீஸ் ஸ்டேஷன். தந்தைக்கு எந்த விவரமும் சொல்லப்படாமல், அக்கம்பக்கத்தினரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வாசகங்களை சகிக்க இயலாது வேறு ஊருக்கு சென்று விட்டனர். கடிதம் எழுதிய அந்த சகோதரர், தன் மனதை, தன் தாய், தமக்கையின் மனதை / வாழ்வை எப்படி தேற்றுவது என விம்மியிருந்தார். ஒரு குடும்பமாய் வாழ்ந்தாலும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதற்கே சங்கடப்படுவதும், தினம் தினம் வாழ்க்கையை முடித்து விடாமல் காப்பதுமே பெரிய மனப்போர் என்று குமுறியிருந்தார்.
சுபஹானல்லாஹ். அந்த சகோதரரை எண்ணுகிறேன். இன்னும் எத்தனை பேரின் வாழ்வை இந்த அயோக்கியன் சீரழித்திருப்பான் என்றெண்ணுகிறேன். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் மோடியின் இறுதி நிமிடங்களை உலகிற்கு சாட்சியாக்கி வைப்பான். எம் மக்களின் வாழ்வை சூறையாண்டவர்களின் கதி எதுவெனவும், அவனோடு இப்பொழுது கொஞ்சி குலவுகிற இந்த முனாஃபீக்குகளின் நிலை எதுவெனவும் அல்லாஹு த ஆலா நிச்சயம் இவ்வுலனகிருக்கும் காட்டுவான், மறுமையிலும் காட்டுவான். ஆமீன்.... ஆமீன்....அல்லாஹும்ம ஆமீன்.
ஹஸ்புனல்லாஹ் வ நி’அமல் வகீல். (இறைவன் போதுமானவன்)
தலைப்பில்லா கவிதை....
Tuesday, September 13, 2011
Anisha Yunus
7 Comments
Tuesday, September 13, 2011 Anisha Yunus 7 Comments
உனக்கும் எனக்குமான மௌனம் நீண்டு கொண்டே போகிறது,
வளைவுகளிலும் சுழிவுகளிலும் நீண்டு ஓடும் ஆற்றைப்போல...
சப்தத்தை விடவும் கடுமையான இரைச்சலோடு...
உனக்கென எழுதிய கடிதங்களை விடவும்
உறைக்குள் இடப்படாத எண்ணங்களே எங்கெங்கும் தெறித்துள்ளது....
தேடிப் பிடித்து புதைத்து விடப் பார்க்கிறேன்
கண்ணீர் வழியோடி மீண்டும் வெளியாகி விடுகிறது -- சட்டென உதிர்க்கும் வார்த்தைகளைப் போல...
அகண்ட வானமெங்கும் இருளாகவே...
மனவெளியாங்கும் தனியாகவே...
நேரம் போவதே தெரியாமலொரு பயணம்...
எல்லையும் தெரியாமல்....
இறந்தும் இறக்காத நினைவுகளை
தோண்டி தோண்டி பார்க்கிறேன்...
ஈர மண்ணில் ஒட்டிக்கொண்ட
ஒரு கனவைக் கொண்டாவது கோட்டை எழுப்பி விடலாம் என....
ஈரமற்ற பாலையாகவே வறண்டு போயுள்ளன அவையும் - ஜன்னல் வெளி
வெறித்தே இருக்கும் என் பார்வையைப் போல...
கவலையெல்லாம் கவிதையாகுமெனில்
கணத்தில் எழுதி விடுவேன்
வடுக்களின் ஈரம் காகிதத்தை கிழித்து விடுமோ என்றே
அஞ்சுகிறேன்...
இலக்கணமற்ற இக் கவிதைக்கு
தலைப்பையும் தவிர்க்கிறேன்.... என்னை தொட
விரையும் உன் நிழலை தெரிந்தே தவிர்ப்பது போல.....
..................
..........................
.............................
.........................................
தலை வாரிப் பூச்சூடி உன்னை...
Tuesday, September 06, 2011
Anisha Yunus
8 Comments
Tuesday, September 06, 2011 Anisha Yunus 8 Comments
ஒற்றை சைக்கிள் அது. அதில் ஆஜானுபாகுவாய் எங்கள் தலைமையாசிரியர் திரு ஜெகன்னாதன் அவர்கள் ஏறி அமர்ந்து உடுமலை - பாரதியார் பெண்கள் மேனிலைப்பள்ளியிலிருந்து வீட்டிற்கோ, வீட்டிலிருந்து பள்ளிக்கோ போகையில் என் முகம் மட்டும் மலரும், அண்டை அயலாரின், ஏன், என்னுடைய உறவினர்களின் கிண்டல்களையும் எதிர்த்து சண்டை போடுவேன்.... ஏனெனில் என் தலைமையாசிரியர் அவர். அவரின் கம்பீரத்திற்கும், மேதைமைக்கும், கணீரென பள்ளி விழாக்களில் அவரின் பேச்சிற்கும், பாட்டிற்கும், ஆளுமைக்கும், இன்று வரையிலும் மாணவி மட்டுமல்ல, விசிறியும் கூட.
தலை வாரிப் பூச்சூடி உன்னை...
பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை.. (2)
சிலை போல ஏன் அங்கு நின்றாய்?????????/
நீயும் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்... (2)
மலைவாழை அல்லவோ கல்வி-மலை வாழை
அல்லவோ பெண் கல்வி.. நீயும் வாயார உண்ணுவாய் போ என் புதல்வி.... தலை வாரிப் பூச்சூடி உன்னை....
(பாடலாசிரியர்: பாரதிதாசன்)
இன்று வரையிலும், இதற்கு மேலும் என்னை கற்கவும், கற்றுக் கொடுக்கவும், பயிலும்போது சோர்ந்திடாமலும் காப்பது என் தலைமையாசிரியரின் இந்த பாடலே (எழுதியது அவரல்ல.... எனினும்,அவர் குரலில் மட்டுமே இதை கேட்டுள்ளேன் நான்)
என்னை உற்சாகமூட்டிய ஒரு குரல், ஒரு இதயம், ஒரு சுடர் விடும் தீபம்...
சார்.. திரு. D. ஜெகன்னாதன் சார்...எங்கிருந்தாலும் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் இறைவன் காத்தருள்வானாக. நேர் வழியில் வைப்பானாக. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்.
இன்னும் என் நினைவில தங்காமல் போன அத்தனை டீச்சர்களுக்கும், என்றும் நினைவை விட்டு அழியாத எல்லா வகுப்பு + டிப்ளமா + காலேஜ் கணித வாத்தியாரம்மாக்களுக்கும், என் கல்வி ஞானத்திற்கு ஒரு துளி வியர்வையாவது சிந்திய அத்தனை பேருக்கும், இதற்கெல்லாம் முன்னோடியாய் எனக்கு ஞானத்தையும் உணவுடன் சேர்ந்தூட்டிய என் ‘அம்மீ’க்கும், பொருளாலும், மதியாலும், தன் வியர்வையாலும் என்னை எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல் கற்க வைத்த என் ‘அப்பா’ விற்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
.
வலை டீவியில் அன்னுவின் பேட்டி....
Wednesday, July 27, 2011
Anisha Yunus
14 Comments
Wednesday, July 27, 2011 Anisha Yunus 14 Comments
===========================================================================
ரமதான் மாதம் முழுதும்--இங்கே பயன் பெறவும்...இன்ஷா அல்லாஹ்
.
ரமணிச்சந்திரன் கதைகள் - என் பார்வையில்
Thursday, June 30, 2011
Anisha Yunus
10 Comments
Thursday, June 30, 2011 Anisha Yunus 10 Comments
ரயில் பெட்டி -1
Friday, June 24, 2011
Anisha Yunus
17 Comments
Friday, June 24, 2011 Anisha Yunus 17 Comments
கலவை பதிவுக்கு ‘டிரங்குப் பெட்டி’ன்னெல்லாம் பேரு வெக்கிறப்ப, நாம ரயில் பெட்டின்னு பேர் வெச்சுக்கலாமேன்னு தோணிச்சு. கரெக்ட்தானே??? ஹெ ஹெ ஹே...
#ஹைக்கூ
அன்றுமலரும் நினைவுகள். 1997ல தினத்தந்தியின் ஞாயிறு மலரில் என்னுடைய இந்த கவிதைக்கு 10 ரூபாய் பரிசா அனுப்பினாங்க. (ஆனா அதுக்கு 300 ரூபாய் பார்ட்டிக்கு அழுதது வேற விஷயம்...!!)
யார் வைத்த முற்றுப் புள்ளியோ
இன்று
இவள் நெற்றியில்
பொட்டில்லை...
#டைம் பாஸ்
இவ்வளவு நாளும் பொறுப்பா கழியணுமேன்னு தினம் ஒரு கதை ரமணிச்சந்திரனுடையது படித்தேன். அந்த கதைகளில் வருவது போல் இந்த காலத்திலும் இளவயதில் லட்ச லட்சமாய் சம்பாதிக்ககூடிய சக்தி, பெரிய பெரிய நிறுவனங்களை ஆளக்கூடிய சக்தி, எல்லா அழகிய கதாநாயகிகளுக்கும் தகுதிக்கேற்ற வேலை தரக்கூடிய சக்தி, பின் அவர்களின் வாழ்வில் மெர்க்குரி லேம்ப் ஏற்றும் சக்தியும் அரசியல்வியாதிகளின் (ஹீரோ)செல்வங்களுக்கு மட்டுமே என்பது என் தாழ்மையான கருத்து. என்ன நான் சொல்றது?
#விதி
அலபாமா, டெனெஸ்ஸீ, கெண்டக்கி மாநிலங்களைக் கடந்து நெப்ரஸ்கா மாநிலத்திலும் வெள்ளம் எல்லை தாண்டி பாய்ந்தது பல ஊர்களில். ஒமஹாவிலும்தான். ஆனால் அதிகமான பாதிப்பு இல்லாமல் இருந்தது மட்டுமே ஆறுதல். கடலருகில் இருக்கும் மாநிலம்தான் பாதுகாப்பற்றது என இனி கூற முடியாதே? உள் தங்கியிருக்கும் இந்த மாநிலங்களின் கதியைப் பார்த்தால் யாருக்குமே இனி எங்கே வசிப்பது என்றுதான் தோன்றும்.
#ஆனந்தக் கண்ணீர்???
(ஊடல் நிமித்தம் ஒரு சின்ன மௌன யுத்தத்திற்கு பின், இரண்டு நாள் கழித்து மாலை ஆஃபீஸ் முடிந்து வந்தவர் சொன்னது)
ஒரியா: என்ன இது, பொருளெல்லாம் இரைஞ்சு கிடக்கு. மௌன யுத்தம் நடந்தப்ப கூட வீடு நீட்டா இருந்ததே??
நான்: (கண்ணை கசக்கிக் கொண்டே) நீங்க வேற, அந்த அழகான நாட்களை ஏன் நியாபகப்படுத்தறீங்க..!!
ஒரியா. GRRRRRRRRRRrrrrrrrrrrrrrrr....
ஓக்கே... தொடராமல் பெண்டிங்கில் இருக்கும் தொடர்களோடு மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ் :))
.
மூளையை பயிற்றுவிக்கும் விளையாட்டுக்கள் -1
Wednesday, May 04, 2011
Anisha Yunus
14 Comments
Wednesday, May 04, 2011 Anisha Yunus 14 Comments
ஹ ஹ ஹா... என்னடா திடுதிப்புன்னு இப்படி ஒரு கேள்வியான்னு யோசிக்க வேண்டாம். நமக்கு இல்லாததை எப்படி ஒமஹா வரைக்கும் தெரிஞ்சு போச்சுன்னும் நினைக்க வேண்டாம். ஹெ ஹெ ஹே... பாம்பின் கால் பாம்பறியும் :))
இப்பல்லாம் வீரர்களை அடுக்கி வெக்கிறதும், அடுத்தவன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டுட்டு வர்றதும், வெனீஸ் நகரின் தண்ணீர் வழியும் வீதிகளில் படகில் போய் சண்டை போடறதும், பூட்டி வெச்ச ரூமிலிருந்து தப்பிக்கிறதுமா நம் விளையாட்டுக்கள் மூளையை பதம் பார்க்கிறதை விட்டுட்டு வேற எல்லாம் செய்யுது. ஆஹா... மூளை வெளில வர்றதுக்குள்ள என்ன மேட்டர்ன்னு சொல்லுன்னு நீங்க சொல்றது சத்தியமா என் காதுல விழலையே... ஹெ ஹெ
மூளை விளையாட்டுக்கள் குறைஞ்சு இந்த மாதிரி, ரேஸிங், ரெஸ்ட்லிங், ஷூட்டிங்னு, மனிதனிடம் ஒளிந்திருக்கிற மிருக குணத்தை மட்டும் உசுப்பி விடற விளையாட்டுக்களைத்தான் விளையாடுகிறோம், பார்க்கிறோம். ஆனால் ஆன்லைன்ல ஒரு தளம் இந்த மாதிரி மூளைக்கு பயிற்சி தரும் விளையாட்டுக்களை தருதுன்னு சொன்னா?? சந்தோஷமா இருக்கா?? இருங்க, முதல்ல என்ன பயனெல்லாம் இருக்குன்னு பார்க்கலாம்.
நம்ம நினைவுத்திறன் / ஞாபகசக்தில ’சேமிக்கும் இடம்’னு ஒன்னும், ‘உழைக்கும் இடம்’ன்னும் ரெண்டு விதமான பிரிவுகள் உண்டு. இதுல நாம் எதை சேமிக்கிறோமோ இல்லையோ, சேமித்ததை மறுபடியும் தேடி எடுக்கும் வழியை சேமிக்க மறந்துர்றோம். உதாரணத்துக்கு, நம்ம குழந்தைகளுக்கு ‘அ’ , ‘ஆ’ எழுத பழக்கும்போதும், சைக்கிள் கத்து தர்றப்பவும் நம் பால்யத்தில் இதெல்லாம் கத்துகிட்டதும், ஸ்லேட்டில் எழுதறதை விட்டுட்டு ஸ்லேட்டு குச்சியை சாப்பிட்டதும் கண்டிப்பா ஒரு நொடியாவது நம் கண் முன் வந்து போகும். ஆனால், முந்தா நாள் என்ன சாப்பிட்டோம்னு டைனிங் டேபிள்ல
எந்த ஒரு பொருளும் அதோட வாழ்க்கை நல்லா இருக்கணுன்னா அதற்கு தகுந்த மாதிரி பார்த்துக்கணும். நம்ம உடம்பை எப்படி ஜிம்முக்கு போயி அல்லது வாக்கிங் போயி பார்த்துக்குறோமோ, அதே போல மூளையையும் பயிற்சி கொடுத்து நல்லபடியா கவனிச்சுகிட்டா எக்ஸாம்ல நல்ல ஸ்கோர் எடுப்பதில் இருந்து, அடுத்த அப்ப்ரைஸல்ல நம்ம பேரை நாம் சொல்லாமலே மத்தவங்க சொல்ற மாதிரி கொண்டு வரலாம். அந்த நினைப்பே இப்பதான் எல்லா தரப்பு மக்களுக்கும் வர ஆரம்பிச்சிருக்கு. அப்படி ‘ஸ்டேஃப்ஃபோர்டு’ பல்கலைக்கழகத்துல மூளை சம்பந்தமான அறிவியல் மாணவராய் இருந்த மைக்கேல் ஸ்கேன்லனுக்கும் தோணியது. விளைவு, கொஞ்ச நாளைக்கு நான் அப்பீட்டுன்னு சொல்லிட்டு, குணால் சர்க்கார், டேவிட் ட்ரெஸ்ஷெர் இவர்களுடன் சேர்ந்து வலை மூலமாக மூளையை வளர்க்கும் பயிற்சிகள் தரலாமான்னு யோசிச்சப்ப வந்த ஐடியாதான் லுமோசிட்டி. 2007ல ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தேதியில் மூன்று மில்லியனையும் தாண்டி ஸ்டாக்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அறுபதுக்கும் மேலான ஆராய்ச்சிகள் மூளையை பயிற்றுவித்தால் என்னவெல்லாம் முன்னேற்றம் காணலாம்னு இன்னொரு தளத்துல இருக்கு. லுமோசிட்டியின் விளையாட்டுக்களினால் அவர்களுக்கு பணம் மட்டும் இல்லாமல், மக்களின் தகவல்களும் கிடைக்குது, எந்த வயசுல எபப்டி சிந்திக்கிறாங்க, என்ன மாதிரி விடை தேடறாங்க, எப்படி இதுல முன்னேற்றம் தர முடியும்னு அவங்களுக்கு தீனியும் நாம் தான் போடறோம்.
பயன்கள்:
- செய்யும் வேலையில் ஒழுங்கு, மனமொத்த நிலை, முன்னேற்றம்.
- கலைத்திறனை அதிகப்படுத்தும் (ஓவியமும் ஆடல் பாடலும் மட்டுமல்ல. UML, Flow chart விஷயங்களும் அடங்கும்!!)
- ஞாபக சக்தியை அதிகரிக்கும்
- மூளையின் நியூட்ரான்களை வளர்க்கும் (இந்த வீரர்கள்தான் நம்மையும், நம் நினைவையும் காப்பாற்றி வைப்பது)
- சுறுசுறுப்பாக, துரிதமாக முடிவெடுக்க வைக்கும்.
- எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறனை அதிகப்படுத்தும்.
- எச்சரிக்கை உணர்வையும், முனைப்புடனும் செயல்பட வைக்கும்.
- ஃபோன் நம்பர், பெயர், சுவை போன்ற விஷயங்களை அதிகமாக நினைவில் வைக்க உதவும், அதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவும் உதவும்.
- உங்களின் வயதோ, பாலோ, மற்ற சம்பிரதாயங்களோ உங்கள் மூளையை பயிற்றுவிப்பதில் இருந்து உங்களை தடை செய்யாது.
- தினம் அரை மணி நேரம் விளையாடுவது பொழுதன்றைக்கும் உற்சாகமாக, புன்னகை முகமாக இருக்க வைக்கும். (அனுபவ பூர்வமான உண்மை!!)
.
ஒரு கொலைகாரனின் பேட்டி - 4 (இறுதி) (உண்மைச் சம்பவம்)
Monday, April 18, 2011
Anisha Yunus
21 Comments
Monday, April 18, 2011 Anisha Yunus 21 Comments
ஒரு ஹிந்துவாக சென்று ஹிந்துக்களின் கூட்டத்தில் பங்கு பெற்று அவர்களின் திட்டத்தை அறிவேன், பின் அவர்கள் அங்கு செல்லும் முன் எப்படியாவது நான் அவர்களுக்கு முன் சென்று அங்கிருக்கும் முஸ்லிம்களை காப்பாற்றினேன். அங்கிருந்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பி வைததேன். ஒரு சில கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை அந்த கிராமத்தை விட்டே வெளியேற்றியும் பாதுகாத்துள்ளேன்.
சூரா 85 : பால்வீதி மண்டலங்கள்
(அல்-புரூஜ்)
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
85:5. விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
85:9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
85:10. நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், பாவமன்னிப்பு கோரவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
85:11. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
85:12. நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
85:13. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
85:14. அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
85:15. (அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
85:17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:18. ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:19. எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
85:20. ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
85:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
ஒரு கொலைகாரனின் பேட்டி - 3 (உண்மைச் சம்பவம்)
Sunday, April 17, 2011
Anisha Yunus
4 Comments
Sunday, April 17, 2011 Anisha Yunus 4 Comments
“ஹ்ம்ம்...பூர்த்தி செய்யுங்கள் அப்துல்லாஹ் பாய், அதன் பின் என்ன நடந்தது..?"
“...சித்தப்பா இஸ்லாத்திற்கு வந்து விடுங்கள்... அப்பா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் "என்று உயர்ந்த குரலில் சொல்லிக் கொண்டே இருந்தாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் அண்ணனோ அழுது கொண்டே என்னிடம், "இன்னும் ஒரு முறை அவளிடம் பேசிப் பார்த்திருக்கலாமே... நாம் நல்லபடி சொல்லியிருந்தால் கேட்டுக் கொண்டிருப்பாளே" என்றார். எனக்கு இம்முறை அவரின் மேல் கோபம் வந்தது. விடுவிடுவென்று அவரை இழுத்துக் கொண்டு நடந்தேன். குழியிலிருந்து 'லா இலாஹா இல்லல்லாஹ் ' கேட்டுக் கொண்டே இருந்தது...."
(பகுதி -4)
.
ஒரு கொலைகாரனின் பேட்டி - 2 (உண்மைச் சம்பவம்)
Friday, April 15, 2011
Anisha Yunus
6 Comments
Friday, April 15, 2011 Anisha Yunus 6 Comments
“அதை சொல்லத்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. இந்தளவு கடினமானதாய் வளர்க்கப்பட்ட என் இருதயம் கூட அந்த கதையை கூற தைரியமற்றுப் போகிறது.”
“கண்டிப்பாக... என் மேல் கூட இறைவனின் கருணை ஏற்பட்டு நானே இஸ்லாத்தில் வந்துவிட்டேன் என்றால் மற்ற மனிதர்களின் மேலும் இறைவனின் கருணை விழாமலிருக்க காரணமே இல்லை...”
...
...
“...அஹ்மது பாய், கேளுங்கள் சொல்கிறேன்...
ஹீறா மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெண்ணாய் இருந்தாள். எவ்வளவு சீக்கிரம் யாரையும் நேசிக்க ஆரம்பிப்பாளோ அதே நேரம் சில மணித்துளிகளில் எதையும் விட்டுவிடவும் தயங்கமாட்டாள். அவளின் இத்தகைய குணத்தால் நாங்கள் கலவரப்பட்டு அவளை மனோதத்துவ டாக்டர்களிடமும், மாந்திரீகவாதிகளிடமும் கொண்டு செல்லாத நாட்களில்லை. ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. எங்கள் சமூகத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டோம் என தெரிந்திருந்தும் அவள் 8வது முடித்ததும் மீண்டும் அதற்கு மேல் படிக்க பள்ளியில் விண்ணப்பம் தந்து வந்து விட்டாள். நாங்களெல்லாம் மிகவும் கோபம் செய்ததும், எங்களின் வயலில் வேலை செய்து படிப்பு செலவை சமாளிப்பேன் என கூறிவிட்டாள்.
பள்ளி ஆரம்பமானதும் அருகிலுள்ள ஒரு அக்ரஹாரத்தில் தெரிந்த ஒரு பிராமணர் வீட்டில் அவர் மகளிடம் டியூஷன் படிக்க ஆரம்பித்தாள். அந்த பிராமணரின் மகன் ஒரு கொடியவன். அவன் அவளின் மனதை மயக்கி வீட்டை விட்டு ஓடி வரச்செய்து பரோட்டுக்கு அருகிலுள்ள காட்டில் கொண்டு சென்று விட்டான். அங்கே அவனின் கூட்டாளிகளும் இருந்தனர். அவர்களெல்லாம் தீவிரவாதிகள். அங்கே போன பின் ஹீறாவுக்கு தான் தவறு செய்தது புரிந்தது. குடும்பத்தின் மானத்தை கெடுத்து விட்டோமே என்று பரிதவித்தாள். தன் கற்பை காத்துக் கொள்ளவும் சிரத்தையுடன் இருந்தாள். இதன் காரணமாக சதா அழுதுகொண்டிருந்தாள். அந்த குழுவில் இத்ரீஸ்பூரிலிருந்து ஒரு முஸ்லிம் பையனும் இருந்தான். அவளின் அழுகையைக் கண்ட அவன், காரணத்தை கேட்டறிந்தான். அவனிடம் அனைத்து உண்மையையும் அவள் கூறினாள். அவளின் இடைவிடா அழுகையை கண்ட அவனும், தானொரு முஸ்லிமாதலால், ஹீறாவை தங்கையாக ஏற்று அவளையும் அவளின் கற்பையும் காப்பாற்றுவதாக வாக்களித்தான். அவளை அந்த கும்பலிலிருந்து காப்பாற்றுவதாகவும் உறுதி கூறினான்.
பின் அந்த குழுவினரிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவன், ஹீறா நிறைய அறிவுடையவள் என்றும் அவளை ஆண்களின் உடையை அணிய வைத்து அவளுக்கும் பயிற்சி தரவேண்டும் என்று கூறினான். பகலில் ஆண் போல முழுக்கை சட்டையும் பேண்ட்டும் அணிந்ததால் பாதுகாப்பாகவும் இருந்தது. இரவினில் அவள் தூங்குமிடத்திற்கு யாரும் வராமலும் பார்த்துக் கொண்டான். சிறிது நாட்களிலேயே குழுவில் அவளின் மேல் எந்த சந்தேகமும் இல்லாமல் போனது. இரண்டொரு நாட்களில் அவன் குழுவினரிடம் ஹீறாவை இத்ரீஸ்பூரிலிருந்து சில தகவல்கள் பெறவும், சில பொருட்களுக்காகவும் அனுப்பி வைக்கலாம் என்று கூறி திட்டமிட்டு அவளை தன் தம்பியுடன் அனுப்பி வைத்தான். போகும் முன் தன் தம்பியை அழைத்து ஹீறாவை போலீஸிடம் தனியே அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டு, பின் திரும்பி வந்து குழுவினரிடம், ஹீறாவின் நடத்தையில் சந்தேகம் வந்து கிராம மக்கள் அவளை போலீஸிடம் தந்துவிட்டதாக கூற சொன்னான். அவனின் தம்பியும் அவ்வாறே செய்தான். ஹீறாவைப் பற்றி ஏற்கனவே எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு எஃப்.ஐ.ஆர் இருந்ததால் ஹீறாவை ஒரு பெண் போலீஸுடன் புதானாவிலுள்ள எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எங்கள் வீட்டிற்கு அவள் வந்துவிட்டாலும் வீட்டை விட்டு ஓடிப்போனவளை எப்படி வீட்டினுள் சேர்ப்பது, அவள் சோடை போயிருப்பாளே என்றே தவித்துக் கொண்டிருந்தோம். ஹீறா இதை அறிந்து கொண்டவளாய் எங்களிடம் வந்து, தான் வீட்டை விட்டு ஓடிப்போனது உண்மைதான் எனினும் தன் கற்பு பறி போகவில்லை என்றே சாதித்தாள். மேற்படிப்பு படித்திருந்த எங்களுடைய உறவினர் ஒருவர், அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க யோசனை கூறினார். போகும்போதே, இவள் தூய்மையானவள் என்று தெரிந்தால் வீட்டிற்கு கூட்டி வரலாமென்றும், இல்லையென்றால் எங்கேயாவது வெட்டி வீசிவிட்டு வந்து விடலாம் என்றும் நானும் என் அண்ணனும் முடிவெடுத்துக் கொண்டோம். டாக்டர் அவளை தூய்மையான பெண் என்று கூறியதும் அவளை மீண்டும் வீட்டிற்கே கூட்டி வந்தோம்.
வீட்டிற்கு வந்த பின் தினம் தினம் அவள் அந்த முஸ்லிம் பையனைப்பற்றி பேசுவதும், முஸ்லிம்களை போற்றுவதுமாக இருந்த அவளின் குணம் எங்கள் எல்லோருக்கும் கோபத்தை வரவழைத்தது. அடியும், மிதியுமாக நாட்கள் சென்றது. ஒரு நாள் எங்கள் தெருவினருகில் குடியிருந்த சில முஸ்லிம்களின் புத்தகங்கள் எங்கள் வீட்டினில் இருக்கக்கண்டு எனக்கு ஆத்திரம் பன் மடங்காக உயர்ந்தது. அவளை என் பலம் கொண்ட மட்டும் அடித்து உதைத்து, இனிமேல் இத்தகைய புத்தகங்களை கண்டால் அவளை உயிரோடேயே விட்டு வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் நாங்களறியா வண்ணம் அவளோ முஸ்லிம்களின் புத்தகத்தை படிப்பதையும், அதை ஆராய்வதுமாக இருந்துள்ளாள். நாங்களெல்லாம் அவளுக்கு யாரோ மாந்திரீகம் செய்து விட்டதாகவே எண்ணியிருந்தோம். அவளோ தன்னுடைய பள்ளிக்கூட ஸ்னேகிதியின் மூலம் எங்கள் கிராம மௌலானாவிடம் (மசூதியின் இமாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் இல்லாத நேரம் வீட்டினில் தொழுகையும் செய்து வந்துள்ளாள். அதன்பின் அவளின் செய்கைகளில் நிறைய மாற்றம் வந்துவிட்டிருந்தது. சோகமே வடிவாக சில நாட்கள் இருந்தவள், பின் யாரிடமும் சொல்லாமல் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ஃபுலாட்டிலுள்ள ஒரு மௌலானா வீட்டிற்கு சென்று விட்டாள். அங்கே சில காலம் இருந்தவள் பின் அஹம்து பாய், பின் உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள்.”
”என்ன?? நீங்கள் அந்த ஹீறா அக்காவைப் பற்றியா பேசுகிறீர்கள்? எங்கள் அப்பாதானே அவர்களுக்கு ஹீறா என்று பெயரிட்டார்? எங்கே அவர்? எப்படி உள்ளார்? எங்கள் வீட்டிலிருந்தும் போய் நாளாகிவிட்டதே???
(மேலும் விசும்பும் ஒலி கேட்கிறது)
" ஆமாம் அஹ்மது பாய், தங்களின் அப்பாதான் அவளுக்கு ஹீறா என்று பெயரிட்டது. அவளின் கொடிய, ஈவு இரக்கமற்ற சித்தப்பாதான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்..."
(மீண்டும் அழுகிறார்...)
“சொல்லுங்கள் அப்துல்லாஹ் பாய்...ஹீறா அக்கா எங்கே??????
“அஹ்மது பாய்....”
ஒரு கொலைகாரனின் பேட்டி - 1 (உண்மைச் சம்பவம்)
Thursday, April 14, 2011
Anisha Yunus
8 Comments
Thursday, April 14, 2011 Anisha Yunus 8 Comments
டேப் ஆன் செய்யப்பட்டது. ரிக்கார்டு பட்டன் அழுத்தப்படுகிறது.
“அஸ் ஸலாமு அலைக்கும் றஹ்மஹ்த்துல்லாஹி வ பரக்காத்துஹூ”
“வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ”
“அப்துல்லாஹ் பாய், உங்களுக்கு தெரிந்திருக்கும். ஃபுலாட்டிலிருந்து ‘அர்முகான்’ என்னும் இதழ் வெளியாகிறது. அதில் உங்களைப்பற்றி எழுத உள்ளோம். உங்களைப்பற்றி எங்கள் ’அர்முகான்’ நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்”
“அஹ்மது பாய்...”
(கண்களிலிருந்து வழியும் நீரை துடைக்கிறார். விசும்பும் ஒலி கேட்கிறது)
“என்னைப்பற்றி கேட்டு உங்கள் நேயர்களை ஏன் நோகடிக்க விரும்புகிறீர்கள்??, என்னைப்போல ஒரு பாதகனை, கொடியவனைப் பற்றி சொல்லி என்னவாகப்போகிறது??”
(விசும்பும் ஒலி கேட்கிறது)
“அழாதீர்கள். ப்ளீஸ். உங்களைப்பற்றி என் தந்தை மௌலானா கலீம் சித்திகி அவர்கள் ’இறைவனின் அதிசயம்’ என கூறிய பின்பே தங்களைப்பற்றி பேட்டி எடுக்கும் ஆவல் வந்தது. சொல்லுங்கள்...”
“உங்கள் தந்தைக்கு இறைவன் நிறைய ஆயுள் தந்து அருள் புரியட்டும். என் எஜமானனைப் போன்று அவர். அவரின் விருப்பம் இது என்றால் நான் தடை செய்யவில்லை...கேளுங்கள், என்ன கேட்க விரும்புகிறீர்கள்??”
“உங்களைப் பற்றி சொல்லுங்கள்...”
“இந்த உலகம் ஆரம்பித்தது முதல் ஒரு கொடிய, மிருகத்தனமான, இரக்கமற்ற, அரக்க குணமுள்ள மனிதன் ஒருவன் இருந்திருக்கிறான் என்றால் அது நானே. அதுதான் என்னைப்பற்றிய முன்னுரை..”
“நீங்கள் உணர்ச்சி பூர்வமாக பேசுகிறீர்கள். சரி உங்களின் பிறப்பு, குடும்பம் பற்றி கூறுங்கள்..”
“நான் 42 அல்லது 43 வருடங்களுக்கு முன் முஜாஃபர் நகர் என்னும் மாவட்டத்தில் (உத்தரப்பிரதேசம்) மாடு மேய்க்கும் 'ஆஹிர்’ ஜாதியில் பிறந்தேன். புதானா என்பது என் ஊரின் பெயர். அங்கே முஸ்லிம் ராஜ்புத்கள் அதிகம். என் குடும்பமோ மிக மிக ஆச்சாரமான ஹிந்து குடும்பம். சிறிது கிரிமினல் பேக்கிரவுண்டும் உண்டு. கொலை செய்வது, கொடுமை செய்வது, அதிகாரம் செய்வது என்பதெல்லாம் என் தொட்டில் பழக்கம் எனலாம். அப்படிப்பட்டது, நான் வளர்ந்த சூழ்நிலை. என் பெரியப்பாவும், தந்தையும் இம்மாதிரியான் ஒரு கும்பலுக்கு தலைவர்கள்.
1987இல், மீரட்டில் வசிக்கும்போது அந்த நேரம் கலவரம் நடந்து கொண்டிருந்தது. என் தந்தையும், நானும் எங்கள் உறவினர்களுக்கு பாதுகாப்பாளர்களாய் இருந்தோம். அந்நாட்களில் கிட்டத்தட்ட 25 முஸ்லிம்களையாவது நாங்கள் கொன்றிருப்போம். அதன் பின் நான் பஜ்ரங்தள்லிலும் சேர்ந்தேன், முஸ்லிம் எதிர்ப்பு அலையை வளர்க்கவே சேர்ந்தேன். 1990இல் ஷாம்லியில் வசிக்கும்போது இன்னும் அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்தேன். அப்பொழுது பாபரி மஸ்ஜித்தின் பிரச்சினையும் நடந்து கொண்டிருந்தது எனக்கு வசதியாய் போனது. மீண்டும் 1992இல் நான் புதானாவிற்கே வந்தேன். அங்கேயும் முஸ்லிம்களை கண்டால் கொல்ல ஆரம்பித்தேன். எங்கள் ஊரிலேயே ஒரு முஸ்லிம் இளைஞன் இருந்தான். அவனின் ஐவேளை தொழுகையும், நேர்மையும், பணிவான முகமும் எங்களாட்களுக்கு பயம் தர ஆரம்பித்தது. நானும் என் நண்பர்களும் குழு அமைத்து, கூட்டாக அவனை சுட்டுக் கொன்றோம். இந்தளவு முஸ்லிம்களைக் கண்டால் வரும் எரிச்சலானது, இறுதியில் என்னை ஒரு கொடியதிலும் கொடிய குற்றத்தை செய்ய வைத்தது...”
(அழும் சப்தம் கேட்கிறது)
“என்னைப்போல ஒரு மிருகம், அரக்கன் இந்த வானத்தின் கீழ் வாழ்ந்திருக்கவும் மாட்டான், பிறந்திருக்கவும் மாட்டான்..."
“திருக்குர்’ஆனில் 30வது அத்தியாயத்தில் அல்லாஹ் நெருப்பின் குழியில் விழும் மனிதர்களைப் பற்றி பேசுகிறான் அல்லவா?? அது என்னைப் பற்றியே... அங்கே மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் வினோதம், ஏனேனில் நான் ஒருவனே அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படுபவன் போலுள்ளவன், நீங்கள் வேண்டுமானால் அந்த ஆயத்தை ஓதிப் பாருங்கள்.”
“நீங்களே ஓதுங்கள்”
"قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ"
“இப்ப, அரபியில் நாம் ‘நெருப்பில் விழுந்த மனிதர்களின் மேல் இறைவன் தன் கருணையை இறக்கினான்’ என்று எப்படி சொல்வோம்??”
“ரஹம் அஸ்ஹாபல் உக்ஹ்து..”
“ஆம். ஆனால், அந்த வசனம் என்னை குறிப்பிடுவதாக இருந்தால் நான்தான் அந்த ‘ரஹம் அஸ்ஹாபல் உக்ஹ்து’..”
“அந்த சம்பவத்தைப் பற்றி கூறுங்கள்”
“அதை சொல்லத்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. இந்தளவு கடினமானதாய் வளர்க்கப்பட்ட என் இருதயம் கூட அந்த கதையை கூற தைரியமற்றுப் போகிறது.”
“தவிர்க்காதீர்கள். நான் வற்புறுத்துவேன், ஏனெனில் இதில் நிறைய மனிதருக்கு படிப்பினை இருக்கக்கூடும்.”
“கண்டிப்பாக... என் மேல் கூட இறைவனின் கருணை ஏற்பட்டு நானே இஸ்லாத்தில் வந்துவிட்டேன் என்றால் மற்ற மனிதர்களின் மேலும் இறைவனின் கருணை விழாமலிருக்க காரணமே இல்லை...”
...
...
“...அஹ்மது பாய், கேளுங்கள் சொல்கிறேன்...”
Naseem e hidaayat ke jhonke part 1
English Name : Breeze of the Guidance
Compiler : Mohammed Yusuf Usman Nadvi
Pages : 260
Year of Publication : 2010
Price Rs 100/- (One Hundred Rupees only)
Jamia-Tul-Imam Wali-ullah Al-Islamia, Phulat, Distt. Muzaffar Nagar.
- Dar-E-Arqam, Batla House, Okhla Head, New Delhi-110025.
- Maktaba Shah Wali-ullah, Batla House, Okhla Head, New Delhi-110025.
பெண் எழுத்து - தொடர் பதிவு
Monday, April 11, 2011
Anisha Yunus
21 Comments
Monday, April 11, 2011 Anisha Yunus 21 Comments
எல்லாரும் எழுதி முடிச்சிட்டாங்க... இப்பத்தேன் நீ ஆரம்பிக்கிறியான்னு யாரும் என்னை குத்தம் சொல்லக்கூடாது. உருது பேசற முஸ்லிம்களிடத்தில் அடிக்கடி எந்த இடத்திற்கும் தாமதமாய் வருபவர்களுக்கு ‘லேட் லதீஃப்’ அப்படின்னு ஒரு பட்டப்பெயர் அமையும், அந்த விருது வழக்கமா என் கைலதேன் இருக்கு. பார்க்கலாம், வேற யாருக்கும் தரும் வேளை வருதான்னு. ஹி ஹி ஹி
![]() |
யாரும் தப்பு கண்டு பிடிக்கக்கூடாது!! சொல்லிட்டேன்!! |
![]() |
சகோதரி. யுவான் ரிட்லீ |
![]() |
டாக்டர். ஃபர்ஹாத் ஹாஷ்மி |
- அப்பாவிப்பெண்ணின் எழுத்தாக தங்கமணி
- அவரின் அடப்பாவித்தனத்தை புட்டு புட்டு வைக்கும் அனாமிகா
- இதுவரை தொடர் பதிவு ஏதும் எழுதியிருக்கிறார என சந்தேகிக்க வைக்கும் அஸ்மா
- எப்பொழுது பார்த்தாலும்ம் கிறுக்கி கொண்டேயிருக்கும் இந்திராக்கா
ஓக்கே...30 நாளைக்குள்ள எழுதலைன்னா அவ்ளோதேன்!!
ஓட்டளிப்பது எப்படி...!!
Sunday, April 10, 2011
Anisha Yunus
5 Comments
Sunday, April 10, 2011 Anisha Yunus 5 Comments
REAL OR IN SILVER SCREEN. ::...
.
அலிகார் பிரியாணி
Monday, April 04, 2011
Anisha Yunus
37 Comments
Monday, April 04, 2011 Anisha Yunus 37 Comments
- முழு கோழி - 1 (அல்லது 2 பவுண்டு / 900 கிராம் மட்டன்)
- முதலில் சிக்கன் ஸ்டாக் செய்ய:
- பூண்டு 10-12 பற்கள்
- துருவிய இஞ்சி - 1 மேஜைக்கரண்டி
- சோம்பு, தனியா - 1 மேஜைக்கரண்டி தனித்தனியாக எடுத்து ஒரு சிறிய துணியில் பொட்டலம் கட்டிக்கொள்ளவும்.
- பெரிய / கறுப்பு ஏலக்காய் - 3
- பிரியாணி இலை - 1 (கட்டாயம் இல்லை)
- குறுமிளகு - 1 தேக்கரண்டி
- இலவங்கம் - 4
- சிறிய பச்சை மிளகாய் 10 (’யலபேனோ’வாக இருந்தால் அதே அளவிற்கு வெட்டிக்கொள்ளுங்கள்)
- நறுக்கிய பெரிய வெங்காயம் 1/2 கப் (என்னிடம் அப்போது சின்ன வெங்காயமே இருந்தது, ஹி ஹி அட்ஜஸ்ட் ப்ளீச்!!)
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் 2 கப்
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- சிக்கன் தோலுடன் இருந்தால், தோல் மற்றும் தேவையற்ற எலும்புகளை போட்டு தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து 7 - 8 விசில் விடவும்.
- கட் செய்த சிக்கன், தோலில்லை என்றால், சிக்கனை சேர்க்காமல் தண்ணீர் மட்டும் ஊற்றி இரண்டு விசில் விடவும். பின் சிக்கன் துண்டுகள் போட்டு 2 நிமிடம் மட்டும் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
- தனியே எலும்புகள் மட்டும் வாங்கியிருந்தால் அதனை தண்ணீர், உப்பு எல்லாம் சேர்த்து 7-8 விசில் விடவும்.
- பூண்டு பற்கள் - 20
- இஞ்சி 4 துண்டுகள் (1” சைஸில்)
- பட்டை - 2 துண்டுகள் (1” சைஸில்)
- ஜாதிக்காய் 2 துண்டுகள் (ஒரு ஜாதிக்காயை உடைத்து சிறிய இரண்டு துண்டுகள் போட்டால் போதுமானது 1/4 அளவு)
ஜாவித்ரி |
- ஜாவித்ரி - 2 சிறிய பூக்கள் (நம்ம ஊரு தாழம்பூவை காய வைத்தது போலிருக்கும், ஜாதிக்காய் மேலுள்ள பூ. சிறிய பூக்களாக போடவும்)
- மேற்கண்ட அனைத்தையும் சிறிதே சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து விழுதாக வைத்துக் கொள்ளவும்.
- குறுமிளகு - 1/2 தேக்கரண்டி
- கருப்பு / பெரிய ஏலக்காய் - 2
- எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
- தயிர் 1 கப்
- பாஸ்மதி அரிசி - 3.5 கப்
- சுடு நீர் (தயார் செய்த ஸ்டாக்குடன் சேர்த்து 5.5 கப் அல்லது அதற்கும் கம்மி. பார்த்துக்கொள்ளுங்கள்)
ஒரே கப்பை தண்ணீருக்கும் அரிசிக்கும் உபயோகியுங்கள். அளவு மாறாமல் இருக்க. |
எப்பவும் போல நான் செய்யும்போது மட்டும் தண்ணீர் ஜாஸ்தியாகி விட்டது!! |
- இந்த பிரியாணியின் சிறப்பம்சமே அதன் வெள்ளை வெளேர் நிறம்தான். அரைத்த விழுதை கரியும் வரை வதக்க வேண்டாம்.
- முழு ஜாதிக்காயில் கால்வாசி போதும். அதிகம் சேர்த்தால் ஒரு மாதிரி தொண்டை எரியும், தலை சுத்துவது போன்றுமிருக்கும்.
- அதிக அளவில் செய்யும்போது தண்ணீர் குறைத்துக் கொள்ளவும்.
- இதே போல் மட்டனிலும் செய்யலாம். மட்டனில் செய்பவர்கள் ஸ்டாக் செய்யும்போது முழுக்கவே மட்டன் துண்டுகளை வேக விட்டு (அல்லது இன்னும் ஒரு விசிலில் வெந்து விடும் போன்ற நிலை வரை) எடுக்கவும்.
- ஸ்டாக் தயாரித்த பின் கறி இல்லாமல் பிளெயின் சாதமாக கூட இப்படி கிளறி எடுத்துக் கொள்ளலாம். எந்த கறி சால்னாவுடனும் அருமையாக இருக்கும்.
- தேவையானால் ஆரஞ்சு கலரை 1 தேக்கரண்டி பாலில் கலக்கி கடைசியில் தெளித்துக்கொள்ளவும்.
அதெல்லாம் ஓக்கே, விடுங்க. கிரிக்கெட் ஆரம்பிக்கும் முன் பாய்காட் செய்ங்கன்னு நிறைய இடத்துல பார்த்த ஞாபகம், இப்ப எங்கயுமே அந்த பட்டன் காணம்??? ஹெ ஹெ ஹெ... அவ்வளவு சீக்கிரம் நம்மால இலங்கை போரை மறக்க முடிந்ததே...என்ன சொல்ல!!
Popular Posts
Labels
இதுவரை...
-
►
2016
(11)
- ► April 2016 (1)
- ► February 2016 (4)
- ► January 2016 (6)
-
►
2015
(33)
- ► December 2015 (1)
- ► October 2015 (1)
- ► September 2015 (12)
- ► August 2015 (6)
- ► February 2015 (1)
-
►
2014
(6)
- ► December 2014 (1)
- ► April 2014 (1)
- ► March 2014 (2)
- ► January 2014 (1)
-
►
2013
(13)
- ► December 2013 (6)
- ► October 2013 (1)
- ► September 2013 (2)
- ► January 2013 (4)
-
►
2012
(30)
- ► December 2012 (6)
- ► November 2012 (4)
- ► October 2012 (1)
- ► September 2012 (5)
- ► August 2012 (1)
- ► April 2012 (4)
- ► March 2012 (1)
-
▼
2011
(25)
- ► September 2011 (4)
- ► April 2011 (7)
- ► March 2011 (4)
- ► February 2011 (4)
-
►
2010
(16)
- ► December 2010 (1)
- ► November 2010 (5)
- ► October 2010 (6)
- ► September 2010 (2)
- ► August 2010 (1)
3 comments:
உங்கள் கருத்துக்கள்...