ஒரு கொலைகாரனின் பேட்டி - 4 (இறுதி) (உண்மைச் சம்பவம்)

Monday, April 18, 2011 Anisha Yunus 21 Comments

இந்த பேட்டியை அப்துல்லாஹ் அவர்களின் குரலிலேயே (ஹிந்தியில்) கேட்க:
முன் பகுதிகளைப் படிக்க:
===================================================

"... அந்த நாளிலிருந்து என் அண்ணன் நோய்வாய்ப் பட்டார். மனதின் நோய் உடலைத் தாக்கியது. என் அண்ணனின் நிலை கண்டும் ஹீறாவின் இறுதியை எண்ணியும் நான் உடைந்து போனேன். ஹீராவின் மரணம் என் அண்ணனை முழுதும் மாற்றியது. சில நாட்களிலேயே படுத்த படுக்கை ஆனார். மரணத்திற்கு இரு நாட்கள் முன்னர் என்னை அழைத்து, "இது வரை செய்த எந்தப் பாவத்தையும் திருப்ப முடியாது. ஆனால் என் மரணம் ஹீராவின் மார்க்கத்தில் அமைய வேண்டும். எனக்கு முஸ்லிமாக மரணிக்க மண் கொடுத்து விடு என்றார். அண்ணனின் உடல்நிலை கண்டு ஒடுங்கிப் போயிருந்த நானும், எனக்கு மிக கஷ்டமான பணியாயினும் அவரின் இறுதி முடிவை மாற்ற விரும்பாமல் சரி என்று சொல்லி யாரும் அறியா வண்ணம் எங்கள் ஊரின் மசூதி இமாமை அழைத்து வந்தேன். அவர் அண்ணனுக்கு கலிமா சொல்லக் சொல்லி 'அப்துர் ரஹ்மான்' என்று பெயர் வைத்தார். அண்ணன் முஸ்லிம் மார்க்கத்தின் படியே இறப்பேன் என்றதும் எனக்கு சுமை அதிகமாயிற்று. என்ன செய்வது என்றெண்ணி அவரை தில்லிக்கு இட்டு சென்றேன். அங்கே உள்ள ஹாஸ்பிட்டலில் அவரை சேர்த்தேன்.

இரண்டாவது நாள் அவர் இறந்து விட்டார். என் அண்ணன் மிக நிறைந்த மனதுடன் இறந்தார். அங்குள்ள 'ஹம்தர்த் தவாகஹானா'வில் இருந்த ஒரு டாக்டரிடம் சொல்லி அண்ணனை, சங்கம் விஹாரில் இருந்த சில முஸ்லிம் சகோதரர்களோடு சேர்ந்து இஸ்லாமியர்களின் கல்லறையில் புதைத்து விட்டு வந்தேன். "

"...நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தது எப்படி என்று இன்னும் சொல்லவில்லையே?"

"...ஆம்....ஆம்.... சொல்கிறேன்..."

"...இந்த சம்பவங்களால் இஸ்லாம் மீதிருந்த கோபம் எனக்குள் குறைந்திருந்தாலும் என் அண்ணன் முஸ்லிமாய் இறந்தது என்னை அதிக வருத்ததுக்குள்ளாக்கியது. என் அண்ணியும் முஸ்லிமாகத்தான் இறந்திருப்பார்கள் என்று என் மனதில் பட்டது. இதனால் யாரோ ஒரு முஸ்லிம்தான் எங்கள் குடும்பத்திற்கு செய்வினை செய்துவிட்டார்கள் என்று
நம்பினேன். அதனால்தான் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இஸ்லாத்திற்கு வந்து பின் இறந்து விடுகிறார்கள் போல என்றெண்ணி ஒரு தாந்த்ரிக்கை பார்த்து பரிகாரம் எதுவும் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

தாந்த்ரிக்கை பார்ப்பதற்காக ஒரு நாள் 'ஓன்' என்னும் ஊருக்கு செல்ல முடிவெடுத்து பஸ்ஸில் அமர்ந்தேன். அந்த பஸ் டிரைவர் ஒரு முஸ்லிம். அவர் பஸ்ஸில் கவ்வாலி பாடல் ஒன்றை போட்டார். அந்தப் பாடலில் முஹம்மது நபியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கவ்வாலியாக பாடியிருந்தார்கள். அதில் ஒரு மூதாட்டி என்னதான் முஹம்மது நபியவர்களை இழித்தாலும் அவருடைய நற்செயல்களைப் பார்த்து அவரும் இஸ்லாத்திற்கு வந்துவிடுவார். அந்த பாடலைக் கேட்ட பின் என் மனதில் இந்த கதையில் வரும் நபிதான் முஹம்மது என்றால் அவர் உண்மையில் நல்லவராகவே இருப்பார் , பொய்யராக இருக்க மாட்டார் என்றொரு எண்ணம் விழுந்தது. 

ஸ்பீக்கர் என் தலைக்கு மேலே இருந்தது. பஸ் ஜுஞ்சானாவில் நின்றதும், ஓன் செல்வதற்கு பதில் நான் அங்கேயே இறங்கிவிட்டேன். என் மனதில் இஸ்லாம் குறித்து படிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. பின் ஷாம்லி செல்லும் பஸ்ஸில் ஏறினேன். அதிலும் டேப் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பாகிஸ்தானி காரி.ஹனீஃப் சாஹெபின் உரை ஓடிக் கொண்டிருந்தது. அந்த உரையில் அவர் ‘ மரணமும் மரணத்தின் பின் மனிதனின் நிலையும்’ என்பதைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். எனக்கு ஷாம்லியில் இறங்க வேண்டியிருந்தது. ஷாம்லி வந்தும் உரை முடியவில்லை. பஸ்ஸை  அமர்த்திய டிரைவர் டேப்பையும் அமர்த்தி விட்டு இறங்கிவிட்டார். நான் அந்த உரையை கேட்பதற்காகவே அதே பஸ்ஸில் மீண்டும் முஜாஃபர் நகர் வரை டிக்கெட் வாங்கினேன். அந்த உரை பாக்றா(மற்றொரு கிராமம்) வந்து முடிவடைந்தது. அந்த உரை இஸ்லாம் பற்றிய என் எண்ங்களை வெகுவாக மாற்றியிருந்தது. பின் நான் புதானா செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். என்னருகில் வந்தமர்ந்தது, ஒரு மௌலவி.

நான் அவரிடம், எனக்கு இஸ்லாத்தைப் பற்றி படிக்க வேண்டும். அதைப் பற்றி அறிய வேண்டும். எனவே எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன். அவர் என்னை ஃபுலாட் போய் அங்கே மௌலானா கலீம் சித்திகீ சாஹெபை சென்று பார்க்க சொன்னார். அவரை விட தகுந்த ஆள் வேறெவரும் இந்தப் பகுதியில் இல்லை என்று கூறினார். நான் ஃபுலாட்டில் இடம், விவரம் தெரிந்து கொண்டு ஃபுலாட் சென்றடைந்தேன். வீட்டிற்கு செல்வதற்கு பதில் நான் ஃபுலாட் சென்றடைந்தேன். அங்கே சென்றால் மௌலானா கலீம் சித்திகீ சாஹெப் அன்று வெளியூர் போயிருந்தார். அடுத்த நாளே வருவார் என்று சொன்னார்கள்.

நான் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டேன். இரவில் நான் படிப்பதற்காக அங்கிருந்த ஒரு ஆசிரியர் மௌலானா கலீம் சித்திகி அவர்கள் எழுதிய  ‘ஆப்கி அமானத் ஆப்கி சேவா மேன்’ (உங்களின் பெரும்சொத்து உங்களின் சேவையில்) என்னும் புத்தகத்தை தந்தார்கள். அதில் எழுதியிருந்த எழுத்தும், எண்ணங்களும் என் மனதையும் எண்ணங்களையும் முழுவதுமாக ஸ்வீகாரம் செய்து கொண்டது. கலீம் சித்திகீ சாஹெப் அவர்கள் அடுத்த நாள் காலை வருவதற்கு பதில் மாலை வந்து சேர்ந்தார்கள். நான் மஃரிப் தொழுகைக்கு  பின் (சூரியன் மறைந்ததும் தொழுவது) மௌலானாவிடம் முஸ்லிம் ஆகும் ஆசையை வெளிப் படுத்தினேன். நான் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவே இங்கே வந்தேன். ஆனால் உங்களின் பெரும்சொத்து (புத்தகம்) என்னை தன்வசம் ஸ்வீகாரம் செய்து கொண்டது என்றேன். மௌலவி கலீம் சித்தீக் சாஹெப் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள், எனக்கு ஜனவரி 31, 2000இல் கலிமா சொல்லித தந்து என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

அன்றைய இரவு நான் அங்கேயே தங்கினேன். இரவு தொழுகை முடிந்ததும் மௌலவி சாஹெபிடம் நான் ஒரு மணி நேர அனுமதி கேட்டு, நான் செய்த தவறுகள், கொலைகள் அக்கிரமங்களைப் பற்றி கூறினேன். என் சொந்த அண்ணனின் மகளான் ஹீறாவை நானே குழியில் தள்ளி, அவள் மீது தீ வைத்ததையும் கூறினேன். மௌலவி சாஹெப் அவர்கள் நிறைய நேரம் அழுது கொண்டிருந்தார்கள். அழுதபின் அவர்கள் கூறினார்கள், ஹீறா எங்களுடந்தான் இருந்தாள். சில நாட்கள் என் தங்கையோடு தில்லியிலும் இருந்தாள் என கூறினார்கள். ‘இஸ்லாம் அதன் (இஸ்லாத்தில் சேரும் முன்) முந்தைய பாவங்களை இல்லாமல் ஆக்கிவிடுகிறது’ என்று கூறினார்கள். ஆனாலும் என் மனம் ஒப்பவில்லை, நான் செய்த பாவங்கள என் மனதை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தன. என் பாவங்களுக்கு என்ன பரிகாரம் என திரும்ப திரும்ப மௌலவி சாஹெபிடம் கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் இஸ்லாத்தின் முன் முஸ்லிம்களை கொன்று கொண்டிருந்தீர்கள். இஸ்லாத்தில் இணைந்த பின்னர் அதை இறைவன் கணக்கிலிருந்து அழித்து விட்டான். ஆனால் உங்கள் மனநிம்மதிக்காக நீங்கள் இனிமேல் முஸ்லிம்களை பாதுகாத்து நன்மையை நாடுங்கள், நன்மை செய்வதும் முன்னர் செய்த தீமையை அழிக்கும் என்று கூறினார். எனக்கும் அதுவே சரியெனப் பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை நான் இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறேன். எங்கேயும், ஒரு முஸ்லிமின் உயிருக்கு ஆபத்து என்றால் ஓடிப்போய் காப்பாற்ற முயல்கிறேன். நான் யாரையும் காப்பாற்றுவதில்லை, காப்பாற்றுவது இறைவனே, நான் ஒரு கருவியே என்றும் எனக்கு தெரிகின்றது, இருந்தாலும் என்னால் முடிந்ததை செய்கிறேன். குஜராத் கலவரத்தின் போது நான் இங்கிருந்து அங்கே சென்று காப்பாற்ற விழைந்தேன். என் இறைவனின் கருணையையும் என்னவென்பேன், எனக்கு அதிகமான வாய்ப்புகளை கொடுத்தான் முஸ்லிம்கள் கொல்லப்படுவதிலிருந்தும் அவர்களை காக்க. 

ஒரு ஹிந்துவாக சென்று ஹிந்துக்களின் கூட்டத்தில் பங்கு பெற்று அவர்களின் திட்டத்தை அறிவேன், பின் அவர்கள் அங்கு செல்லும் முன் எப்படியாவது நான் அவர்களுக்கு முன் சென்று அங்கிருக்கும் முஸ்லிம்களை காப்பாற்றினேன். அங்கிருந்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பி வைததேன். ஒரு சில கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை அந்த கிராமத்தை விட்டே வெளியேற்றியும் பாதுகாத்துள்ளேன்.

இன்னுமொரு காரியத்தைப் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். அல்லாஹ் அதன் மூலம் என் மனதில் நிம்மதியை நீக்கமற நிறைத்து விட்டான். நீங்கள கேள்விப்பட்டிருப்பீர்கள் குஜராத் கலவரத்தின் போது பாவ்நகரில் உள்ள மதரஸாவின் 400 பிள்ளைகளையும் அதனுள்ளேயே வைத்து எரிக்க திட்டமிட்டதை. நான் முதலில் அந்த பகுதியின் இன்ஸ்பெக்டர் ஷர்மாவிற்கு தகவல் தந்து முதலில் அவரை தயார் நிலையில் இருக்க சொன்னேன். பின்னர் மதரஸாவின் பின் சுவற்றை என் கையால் இடித்து வழி ஏற்படுத்தி அந்த குழந்தைகளை தப்பிக்க வைத்தேன். அந்த 400 குழந்தைகளை காப்பாற்ற அல்லாஹ் என்னை பயன்படுத்தினான் என்பதே எனக்கு இன்று வரை நிம்மதி தரும் விஷயம். அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே.)

மூன்று மாதம் வரையிலும் குஜராத்தில் இதற்காகவே தங்கியிருந்தேன். இருந்தாலும் இஸ்லாத்திற்கு முன்னர் நான் செய்த அக்கிரமங்கள்  எண்ணிக்கையிலடங்காதது. இதை எப்பொழுது மௌலானால்விடம் கூறினாலும் அவர் கூறுவது ஒன்றே ஒன்றுதான். எந்த அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி இன்று முஸ்லிமாக்கி இவ்வளவு நன்மைகளை  செய்ய வைத்திருக்கிறானோ அவனின் கருணையிலும், மன்னிப்பிலும் இன்னும் நம்பிக்கை வையுங்கள் என்பதே.

அதன் பின் இஸ்லாத்தை கற்பதற்காக நேரம் ஒதுக்கி ஜமா’அத்தில் செல்ல மௌலானா சாஹெப் பணித்தார்கள். நான் இரண்டு மாதங்கள் கழித்து வருகிறேன் என்று சொல்லி புதானாவிற்கு சென்று என்னுடைய நிலங்கள், மாடு, வீடு எல்லாவற்றையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு தில்லி சென்று ஒரு வீட்டை வாங்கினேன். என் மனைவி, ஹீறாவின் தம்பிகள், ஒரு தங்கை அனைவரிடமும் இஸ்லாத்தைப் பற்றி  எடுத்து சொல்லி அவர்கள் அனைவரையும் ஃபுலாட்டிற்கு அழைத்து வந்து இஸ்லாத்தில் இணைய வைத்தேன். அதில் எனக்கு இரண்டு மாதங்களுக்கு பதில் ஒரு வருடம் ஆகிவிட்டது. பின்னர் ஜமா’அத்தில் சேர்ந்து அதில் என் நேரத்தை பயனுள்ளதாக்கினேன். 

இருந்தாலும் என் மனதில் ஒரு கேள்வி நீங்காமல் உள்ளது, இத்தனை மனிதர்களையும், பூ போன்ற குழந்தை ஹீறாவையும் கொன்ற எனக்கு எப்படி அல்லாஹ் மன்னிப்பு தருவான் என்று. இதை மீண்டும் மௌலானாவிடம் கூறியதும் திருக்குர்’ஆனை அதிகமதிகம் படிக்குமாறும் முக்கியமாக சூறா புரூஜ்(அத்தியாயம் 85 - பால்வீதி மண்டலங்கள்) அதிகமாக வாசிக்கவும் கூறினார். அதன்படி செய்ததில் இன்று அந்த அத்தியாயம் எனக்கு மனனம் ஆகி விட்டது. 1400 வருடம் முன்னர் இறக்கப்பட்ட அந்த அத்தியாயத்தை படிக்கும்போதெல்லாம் எனக்கு, என் இறைவன் என்னைப் பற்றி அறிந்தே அதை எனக்காக இறக்கியுள்ளான் என்றிருக்கும். 

சூரா 85 : பால்வீதி மண்டலங்கள்
(அல்-புரூஜ்)


( அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன் )
85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
85:5. விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
85:9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
85:10. நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், பாவமன்னிப்பு கோரவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
85:11. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
85:12. நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
85:13. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
85:14. அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
85:15. (அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
85:17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:18. ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:19. எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
85:20. ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
85:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

" மக்களே... திருக் குர்'ஆனின் அந்த அத்தியாயத்தை படியுங்கள். மற்றும் என் ஹீறாவின் இறுதி சொற்களை நினைவில் வையுங்கள்:

“யா அல்லாஹ்... நீ என்னை பார்க்கிறாய் அல்லவா? யா அல்லாஹ் என்னை நீ பொருந்திக் கொண்டாய் அல்லவா.. பாறையினுள் இருக்கும் வைரத்திற்கும் செவி சாய்ப்பவனே... குழியில் நெருப்பில் கரியும் இந்த ஹீறாவின் வார்த்தையையும் கேட்கிறாய் அல்லவா... என்னைப் பொருந்திக் கொண்டாய் அல்லவா..சித்தப்பா இஸ்லாத்தின்பால் வந்து விடுங்கள். அப்பா...இஸ்லாத்தில் இணைந்து விடுங்கள்...”



.

21 comments:

  1. முழு நிகழ்ச்சியையும் தொடர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இத்தனை நாளா தலைப்பை மட்டும் பார்க்க முடிந்ததே தவிர ஒரு வரிகூட படிக்க நேரமின்றி போய்விட்டது அனிஷா. இன்று 4 பாகங்களையும் சேர்த்து படித்தேன். சுப்ஹானல்லாஹ், அல்லாஹ்தஆலா நினைத்தால் எப்படிப்பட்டவர்களையும் இஸ்லாத்தின் பக்கம் நேர்வழி காட்டிவிடுவான் என்பதை இஸ்லாத்தின் வரலாறு நெடுகிலும் காணமுடியும். நம் சமகாலத்திலும் எத்தனையோ நிகழ்வுகள் என்றாலும், இதுப்போன்ற சில நிகழ்வுகள்தான் வெளி உலகுக்கு தெரிகிறது. அதற்காக முயற்சி எடுத்த உங்களுக்கு இறைவன் நற்கூலி வழங்கட்டும்!

    //பேட்டியின் முடிவில் ஒலி வடிவ லின்க்கும் தருகிறேன்// அதையும் கொடுங்க அனிஷா. ஹீராவின் முடிவையும், கடைசி பிரார்த்தனைகளையும் படிக்கும்போது நம்மை அறியாமலே கண்ணீர் பெருக்கெடுக்கிறது! அவர்களின் ஈமானை அல்லாஹ்தஆலா அங்கீகரித்து மறுமையின் சுவனச் சோலையை பரிசளிப்பானாக! இந்த பேட்டியில் குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதையும் அவர் குறிப்பிடுகிறார். 'நல்லவரு, வல்லவரு'ன்னு புகழாரம் சூடப்படும் மோடியின் கீழ் நடந்த அந்த படுகொலைகள் பலராலும் மறைக்கப்படுகிறது. கொலைவெறி ஆட்சி செய்யும் மோடியின் அக்கிரமங்களுக்கு இந்த பேட்டிகூட ஒரு சாட்சி!

    "ஒரு கொலைகாரனின் பேட்டி" - தலைப்பில் சின்ன மாற்றம் செய்தால் நலமாக இருக்கும் என தோன்றுகிறது. இப்போது அவர் ஈமானுள்ள ஒரு இறையடிமையல்லவா? (என் கருத்துதான்)

    ReplyDelete
  3. எல்லாப்பகுதியையும் தொடர்ந்து படிச்சிட்டேன். மனதை நடுங்க வைக்கும் சம்பவங்கள்..

    ReplyDelete
  4. பல முஸ்லிம்களைக் கொன்ற அதே கையால், எண்ணற்ற முஸ்லிம்களின் உயிரைக் காக்கவும் செய்திருக்கிறார், அதுவும் குஜராத் கலவரத்தின்போது!! இறைவன் வல்லவன்.

    ReplyDelete
  5. ரொம்ப நாள் கழிச்சு வர்றேன்.. :-)..

    இது என்ன இவ்வளவு லெந்தியா இருக்கு போஸ்ட்.. அதுவும் நாலாவது பாகமா... நான் வீக் எண்ட் வந்து எல்லாப் பதிவையும் படிக்கறேன்.. :-)

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அன்னு,

    மிகவும் அருமையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் மொழிபெயர்த்து தமிழ்ப்பதிவுலகுக்கு ஓர் அரும்பணி ஆற்றி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. இறைவன் நாடினால் எவ்வளவு கொடியவருக்கும் ஹிதாயத் வழங்குகிறான் என்பதை அறிகிறோம்.

    அவரின் அண்ணன் இறப்பதற்கு முன், ஊரின் இமாமை இரகசியமாக அண்ணனிடம் அழைத்து வந்தும், இறந்ததும் அண்ணனின் நல்லடக்கத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

    அண்ணன் மகளை எரிக்கும்போது ஏற்படாத மனமாற்றம் அதன் பின்னர், அண்ணன் இருக்கும்போதே இவருக்கு எற்பட்டிருக்கிறது என்றால், வேறு ஏதோ ஒரு முக்கிய திருப்புமுனை சம்பவம் மேலும் நல்ல உரையாடல்களுடன் இவர் வாழ்வில் நடந்திருக்க வேண்டும்.

    சகோ.ஹீராவின் கொலையை அவர் தந்தை மன்னித்திருக்கலாம். மேலும், பாவமன்னிப்பை ஏற்று இறைவன் மன்னித்தால், அவர் சொன்ன குர்ஆனின் அல்புரூஜ் அத்தியாத்தில் 11-வது வசனத்தின்படி இவர் மறுமையில் வெற்றி பெறுவோராய் இருக்கலாம். ஆனால், இம்மையில்..?

    இவரின் மகளின் கொலை ஒன்றை மட்டுமா இவர் செய்தார்..? இப்பதிவின் முதல் பகுதியில் இவர் செய்த கணக்கில்லா கொலைகள் நடந்தது எல்லாம் ஓர் அரசும் சட்டமும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அல்லவா..? கொலை செய்வது தவறு என்று தெரியாதா..? அப்புறம் இந்த இந்திய சட்டங்களுக்கு எல்லாம் இவரிடம் மதிப்பில்லையா..?

    ஏனோ, சகோ.அன்னு, இதை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஸாரி டு சே திஸ்..சகோ.அன்னு..!

    அவரால் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்தார் மன்னிப்பையும் அவர் நேரடியாக பெற்றுக்கொள்ளாத பட்சத்தில், அவர் இந்திய சட்டத்திடம் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்திருக்கத்தான் வேண்டும் சகோ.அன்னு...!

    ReplyDelete
  7. நடுங்கிட்டே படித்து முடித்தேன் .குஜராத் கலவரம் போது அப்ப எல்லாம் எங்களுக்கு இவ்வளவு நியூஸ் எதுவும் தெரியாது .இந்த பதிவை படிக்கும்போது நெஞ்சம் பதற வைக்கும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகொண்டேன் .
    மன்னிப்பது தெய்வ குணம் .அவருக்கு இனி மன நிம்மதி கிடைக்கட்டும் .

    ReplyDelete
  8. கண்ணு கலங்கிடுச்சி .ஏற்கனவே தெரிந்த விசயமாக இருந்தாலும் மொழிப்பெயர்ப்பில் ஒரு உயிரோட்டம்.

    ReplyDelete
  9. இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன். படிக்க திகிலா இருக்கு. நல்ல பதிவு, அன்னுக்கா.

    ReplyDelete
  10. அழகாக, விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறீர்கள் சகோ அன்னு.

    அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழியை தருவானாக

    ReplyDelete
  11. இன்னைக்கி தான் அன்னு நாலு பகுதியையும் சேர்த்து படித்தேன்... முதலில் ஏதோ கதைன்னு நெனச்சு படிச்சுட்டு வந்தேன்... அப்படியே ஒன்றி விட்டேன்... எல்லா மதமும் போதிப்பது ஒன்று தான்,அது "அன்பு"னு புரிந்தது...

    அதுமட்டுமின்றி, ஒருவரின் இருப்புக்கும் இறப்புக்கும் காரணம் உண்டுனு புரிய வெச்சது ஹீராவின் மரணமும் அதன் பின் வாழ்ந்த அவரின் சித்தப்பாவின் வாக்குமூலமும்...

    பகிர்த்து கொண்டதற்கு மிக்க நன்றி அன்னு... இல்லையெனில் இதை படிக்க எனக்கு வாய்ப்பு இருந்து இருக்குமா என தெரியவில்லை... நன்றி

    ReplyDelete
  12. அன்னு நேரம் இல்லை என்று பிறகு படிகக்லாம் என்றூ இருந்தேன் ஆனால். என்னால் வேறு எந்த வேலையும் ஓடல,
    மறுபடி வந்து 4 பகுதியும் படித்து விட்டேன்.
    உடல் சிலிர்க்கிற்து
    அருமையான உண்மை சம்பவத்தை அதுவும் மொழி பெயர்த்து தமிழில் விளக்கி இருக்கீங்க
    ஆண்டவன் உங்களுக்கு நற்கிருபை புரிவானாக..

    ReplyDelete
  13. ஸலாம் சகோ அன்னு..

    இந்த தொடர் பதிவின் மூலம் நீங்கள் ஒரு சாதாரண காரியத்தை செய்துவிடவில்லை சகோ..

    நூறு பேர் செய்யக்கூடிய தாவாவை இந்தப் பதிவு செய்துவிடும்..

    அல்லாஹ்!!!..படிக்கும் போது கண்கலங்குவதை தவிர்க்க முடியவில்லை சகோ.

    அதுவும்,சகோதரி ஹிரா அவ்ர்களுக்கு ஏற்பட்ட முடிவும் அதை அவர் எதிர் கொண்ட ஈமானிய திடமும்,நம்மிடம் அதில் ஒரு பங்காவது இருக்குமா என பரிசோதிக்கச் சொல்கிறது மனது??

    சக மக்கள் படும் அல்லல்களை கணக்கில் கொள்ளும்போது அல்லாஹ் நம்மை எத்துனை சிறப்பாக வைத்துள்ளான்,நாம் அவனுக்கு எத்தனை நன்றி மறந்தவர்களாக இருக்கிறோம் என எண்ணுகிறேன்..இந்த பதிவின் மூலம் தனிப்பட்ட முறையில் நான் உணர்ந்த எனது நிலை இது...

    அது தவிர்த்து,தங்களின் தேர்ந்த எழுத்து,சம்பவங்களை கண்முன் கொண்டுவருகிறது..

    அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்க போதுமானவன்...

    (முதலில் தலைப்பை பார்த்தவுடன் என்னடா,கொலைகாரனின் பேட்டியா??.அப்போ ஏதோ த்ரில்லிங் கதை போல..அப்டீன்னு விட்டுட்டேன்,,அப்ரம் 4வது பதிவோட ஆரம்பம்தான்..என்னை முதலில் இருந்து படிக்க வைத்தது...)

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  14. எழுதிரணும்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்படியே ஒரு ஓட்டும்தேன் போட்டுட்டு போங்களேன்...

    ம்ம்...போட்டாச்சு சகோ...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  15. இறைவன் மிகவும் வல்லமை படைத்தவன். அவன் நினைத்தால் எதுவும் சாத்தியம்.

    மிகவும் நெகிழ்வான சம்பவம் படிப்பினையும்கூட.

    ReplyDelete
  16. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

    ReplyDelete
  17. ஸலாம்
    முழுவதும் படித்தாச்சு.இப்படியும் மனிதனா?என்னத்த சொல்ல..
    அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர் வழியைக் காட்டுவான்.

    ReplyDelete
  18. @ஆஸியாக்கா,
    தொடர்ந்து படித்து வாழ்த்தியமைக்கு மிக நன்றி :)

    @அஸ்மா,
    காரணமாகத்தான் தலைப்பை வைத்துள்ளேன். :)
    ஆனால் அவர் மீதான் மரியாதை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் பெருகத்தான் செய்கிறது.
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @அமைதிச்சாரலக்கா,
    இதே மாதிரி நிறைய கொடுமைகளை சந்தித்து இஸ்லாத்தை உடும்பு பிடியாய் பிடித்து வந்த பல பேர் என் வாழ்வில் சந்தித்துள்ளேன். கேள்வி என்னவென்றால், ஏன் அப்படி வரவேண்டும்? என்ன இருக்கிறது இஸ்லாத்தில்????
    அனைவரும் யோசிக்க வேண்டும், ஆராய வேண்டும்.
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @ஹுஸைனம்மா,
    அதே!! அதே!!
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @பாபு அண்ணா,
    மீண்டும் வந்து படித்தீர்களா??? ஏதும் தெரிவிக்கவில்லை?
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @முஹம்மது ஆஷிக் பாய்,
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும். லாஜிக்கலாய் யோசித்தாலும், பிராக்டிக்கலாக தெரிவதும் ஒன்றே ஒன்றுதான். அவர் சட்டத்தின் முன் சரணடைந்திருந்தால் பல தலைகள் உருண்டிருந்திருக்கும். ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனையோ அவர் உயிரையும், வாழ்வையும் பறித்திருக்கும். ஆனால் நன்மையை நாடி அவர் அந்த முடிவை எடுக்காதது, இன்று 400 உயிர்களுக்கும் மேல் பிழைக்க வைத்துள்ளதே. இந்த செயலை செய்யப்போகிறோம் என்பது அவருக்கே அப்பொழுது தெரிந்திருக்காதுதான். ராகிங்கில் உடன்படவில்லை என்பதற்காக துடிக்க துடிக்க கொலைசெய்து திட்டமிட்டு நாலா புறங்களிலும் உடல் பாகங்களை வீசிய கொலைகாரனுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதும், கொலை செய்தவர் இன்று பாதிரியாராக உள்ளார், குடும்பஸ்தராக உள்ளார் என்றுதானே வாதாடுகிறார்கள். அதற்கு இவரின் தொண்டு பன்மடங்கு உயர்ந்ததாகவே நான் கருதுகிறேன். என் குடும்பத்தில் ஒருவரை திரு.அப்துல்லாஹ் கொலை செய்திருந்தாலும், இதுவே என் நிலையாக இருந்திருக்கும், இன்ஷா அல்லாஹ்.
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @ஏஞ்சலின்,
    குஜராத் கலவரம் பற்றி பற்பல உண்மை வீடியோக்களும், புனையப்பட்ட வீடியோக்களும் இன்றும் யூடியூபில் காணலாம். ’The final solution' என்னும் வீடியோவை பாருங்கள். அது நடுனிலையாக பதியப்பட்டது. உள்ளதை உள்ளபடி.
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @ராஜவம்சம் பாய்,
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @வானதிக்கா,
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @அபூ நிஹான்,
    முதல் தடவை வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @புவனா,
    வாழ்த்துக்கும், முழுவதும் படித்து கருத்து தெரிவித்தமைக்கும் மிக மிக நன்றி. ஆம். ஒருவரின் இறப்பும் வீணாகுவதில்லை. ஏன் என்று ஆராய்ந்தறியத்தான் நாம் மறுக்கிறோம்.
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @ஜலீலாக்கா,
    து’ஆவிற்கும், முழுவதும் படித்து கருத்து தெரிவித்தமைக்கும் மிக மிக நன்றி அக்கா. :)

    @ரஜின் சகோ,
    இந்த பேட்டியை ஒலி வடிவில் கேட்கும் ஒவ்வொரு த்டவையும் என் உடல் நடுங்குவதையும், கண்ணீர் சரம் சரமாக உருண்டோடுவதையும் தவிர்க்க முடிவதில்லை சகோ. தங்களின் து’ஆவிற்கும் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @மலிக்காக்கா,
    அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று சும்மாவா சொன்னார்கள்?
    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    @சினேகிதி,
    மிக மிக நன்றி. இதோ வந்து கொண்டேயிருக்கிறேன். :)

    @ஸுமராஸ்,
    சரியாக சொன்னீர்கள். தான் நாடியவர்களுக்கு இறைவன் வழி காட்டுகின்றான்.
    முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ;)

    ReplyDelete
  19. இறைவன் தான் நாடுபவர்களுக்குதான் ஹிதாயத்தை தருவான் என்பது முற்றிலும் உண்மையே

    ReplyDelete
  20. இறைவனின் வேத வார்த்தைகளும் ஹிரவின் இறுதி சொற்களும் பல வருடங்களாக சேர்த்து வைத்த என் கண்ணீர் என்னை அறியமேலேயே சிந்திவிட்டது.

    சகாபாக்கள் காலத்தில்தான் ஹிரவை போன்ற முஸ்லிம்கள் வாழ முடியும் என்ற என்னத்தை உடைத்து எறிந்துள்ளார் ஹிரா

    ஹிரவிர்க்கு நடந்த கொடுமையை கேட்ட்கும் பொழுதே உள்ளம நடுங்கும் இந்த தருணத்தில் சகோ அப்துல்லாவின் மனநிலையை என்னால் உகிக்க முடியவில்லை,செய்த செயலை நினைத்து வாடும் சகோதரரின் மன அமைதிக்கு அல்லாஹுவிடம் பிராத்தனை செய்வதை விட வேறு என்ன செய்ய முடியும்

    சகோதரருக்காக துஅ செய்யுங்கள்

    ReplyDelete
  21. இறைவனின் வேத வார்த்தைகளும் ஹிரவின் இறுதி சொற்களும் பல வருடங்களாக சேர்த்து வைத்த என் கண்ணீர் என்னை அறியமேலேயே சிந்திவிட்டது.

    சகாபாக்கள் காலத்தில்தான் ஹிரவை போன்ற முஸ்லிம்கள் வாழ முடியும் என்ற என்னத்தை உடைத்து எறிந்துள்ளார் ஹிரா

    ஹிரவிர்க்கு நடந்த கொடுமையை கேட்ட்கும் பொழுதே உள்ளம நடுங்கும் இந்த தருணத்தில் சகோ அப்துல்லாவின் மனநிலையை என்னால் உகிக்க முடியவில்லை,செய்த செயலை நினைத்து வாடும் சகோதரரின் மன அமைதிக்கு அல்லாஹுவிடம் பிராத்தனை செய்வதை விட வேறு என்ன செய்ய முடியும்

    சகோதரருக்காக துஅ செய்யுங்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...